யாழில் மூன்று மின்சார உற்பத்தி நிலையங்கள்

tamilni 215

யாழில் மூன்று மின்சார உற்பத்தி நிலையங்கள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய இடங்களில் 3 புதிய மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த புதிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவும் ஒப்பந்தம் இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை Solar Spotless Energy Solutions (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Exit mobile version