நள்ளிரவில் ஏற்பட்ட கோர விபத்து : மூவர் பலி

tamilnaadi 60

கொழும்பு – குருநாகல் வீதியில் பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு, குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மரக்கறி ஏற்றிச் செல்லும் லொறி ஒன்றுடன் எதிர்திசையிலிருந்து வந்த முச்சக்கரவண்டி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 04 பேர் படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இறந்தவர்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனவே, சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்துஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version