உணவு விஷமாகியதால் 29 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

tamilnih 19

உணவு விஷமாகியதால் 29 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகலய கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் 29 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு விஷமாகியதன் காரணமாக சூரியவெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 26 மாணவர்களும் 03 மாணவிகளும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரவில் சாப்பிட்ட பொறித்த மீன் வகையே இந்த பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சூரியவெவ வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version