14 6
இலங்கைசெய்திகள்

நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் தொடர்பில் தகவல்

Share

நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் தொடர்பில் தகவல்

நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக கடந்த ஆண்டில் 29.5 வீதமாக மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரம் போன்ற விடயங்களில் நாட்டின் 55.7 வீதமானவர்கள் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை கல்வி, பாடசாலை வரவு,நோய் நிலைமைகள், சுகாதார வசதி பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை, வீடுகள், குடிநீர், சமையல் எரிபொருள் வசதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய காரணிகள் உரிய முறையில் கிடைக்கப் பெறாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வசதி குறைந்தவர்கள அதிகளவில் கிராமிய பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும் சுமார் 82 வீதமான கிராமிய மக்கள் இவ்வாறு வறுமையில் வாடுவதாகவும் கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...