இலங்கைசெய்திகள்

தமிழக கடற்றொழிலாளர்கள் 25 பேருக்கு விளக்கமறியல்

Share
rtjy 122 scaled
Share

தமிழக கடற்றொழிலாளர்கள் 25 பேருக்கு விளக்கமறியல்

பருத்தித்துறை கடற்பரப்பில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த 25 தமிழக கடற்றொழிலாளர்களுக்கான விளக்கமறியல் உத்தரவை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடித்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த டிசம்பர் 09 ஆம் திகதி 2 படகுகளுடன் நாகப்பட்டினத்தை சேர்ந்த 25 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு படகில் பயணித்த 25 கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளினால் இன்று (22) பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை முன்பாக முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையினை மன்றில் தாக்கல் செய்வதற்கு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து வரும் டிசம்பர் 28 ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டு அதுவரை 12 கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

13 கடற்றொழிலாளர்களுக்கு நிபந்தனையுடனான விடுதலை அறிவிக்கப்பட்டாலும், கடற்படையினரை தாக்கிய வழக்கில் கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பொலிஸார் கேட்டுக் கொண்டதற்கு அமைய கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...