24 6621d3bf0f02f
இலங்கைசெய்திகள்

அவசர நேரத்தில் சிக்கித்தவித்தவர்களில் ஒருவரா..!

Share

அவசர நேரத்தில் சிக்கித்தவித்தவர்களில் ஒருவரா..!

இன்றைய நவீன உலகானது பல்துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருகின்றமையை காணலாம். அவ்வகையிலேயே மருத்துவத்துறையானது அபரிவிதமான வளர்ச்சியை சந்தித்துள்ளது.

இன்று மருத்துவத்துறை வளர்ச்சி காரணமாக எண்ணிலடங்கா சாதனைகளை உலகம் கண்டு வருகின்றது.

நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் சேர்ந்ததே மருத்துவம் ஆகும்.

மருத்துவமானது நோய்களை கண்டறியவும் அவற்றை குணப்படுத்தவும் நோய்கள் வராமல் தடுப்பதற்கும் உதவுகின்ற அறிவியல் செயற்பாடு எனலாம்.

மருத்துவம் என்பது மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், நோய் வராமல் தடுத்தல், நோய்களிலிருந்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு உடல்நலச் செயல்முறைகளை உள்ளடக்கும்.

மருத்துவத்துறையில் நோய் நீக்கும் வைத்தியர்களும், வைத்தியசாலைகளும் இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத விடயமாக இருக்கிறது. அதேநேரம் மருந்தகங்களும் முக்கியமல்லவா?

வைத்தியசாலைகளை அடுத்து மருந்தகங்களை நம்பியே பலரும் தமது அன்றாட மருந்து தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர் என்பதே நிதர்சனம்.

தற்காலத்தை பொறுத்த வரையில் அடிப்படை நோய்கள் தொடர்பான விழிப்புணர்வும், அதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் தொடர்பான விழிப்புணர்வும் பெரும்பாலானோரிடம் இருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்த விடயம்.

எனவே மருந்தகங்கள் மூலமாக தமது மருந்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்பவர்கள் ஏராளம். ஆனால் கொழும்பு உள்ளிட்ட பரபரப்பான நகரப் பகுதிகளை தவிர வேறு எத்தனை பகுதிகளில் 24 மணிநேரமும் இயங்கும் மருந்தகங்கள் இருக்கின்றன என்று பார்த்தால் கேள்விக்குறியே.

குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை இரவு நேரத்தில் இக்கட்டான சந்தர்ப்பத்தில் மருந்து இன்றி தவிக்கும் போது மருந்துகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு எந்தெந்த பகுதி மக்களுக்கு கிடைக்கிறது?

வைத்தியர் வழங்கிய பற்றச்சீட்டு இருந்தாலும் அவசர தேவைக்கு இரவு நேரங்களில் இயங்கும் மருந்தகங்கள் பல பகுதிகளில் கண்ணில் எட்டும் தூரத்திற்கு இருப்பதில்லை.

வைத்தியசாலைகள் எந்தளவிற்கு முக்கியமோ அந்தளவிற்கு மருந்தகங்கள் இல்லை இல்லை 24 மணிநேரமும் இயங்கும் பொறுப்பு வாய்ந்த மருந்தங்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...