எல்லை தாண்டிய 22 இந்திய மீனவர்கள் கைது!!

Fisherman 02

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகையை சேர்ந்த 22 மீனவர்களையும் அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பருத்தித்துறை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 22 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 22 மீனவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் இன்று காலை ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#SrilankaNEws

 

 

Exit mobile version