5
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் மூன்று நாடுகள் பயணத்துக்கு 18 இலட்சம் ருபாய்: தெளிவுப்படுத்திய அரசாங்கம்

Share

ஜனாதிபதியின் மூன்று நாடுகள் பயணத்துக்கு 18 இலட்சம் ருபாய்: தெளிவுப்படுத்திய அரசாங்கம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெறும் 1.8 மில்லியன் ரூபாய்களில், மூன்று நாடுகளுக்குச் சென்று வந்தமை தொடர்பில், அரசாங்கம் தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்திய பயணத்துக்கு 1.2 மில்லியன் ரூபாய்கள் மட்டுமே செலவிடப்பட்டது என்றும், சீன பயணத்துக்கு 386,000 மற்றும் துபாய் வருகைக்கு 279,970 மட்டுமே செலவிடப்பட்டது என்றும், அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சீனா மற்றும் துபாய் பயணங்களுக்கு இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாகவும், இந்திய பயணத்துக்கு விமான டிக்கெட்டுகளுக்கு 386,000 செலவிடப்பட்டதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திய பயணத்துக்காக ஜனாதிபதி செயலகம் மேற்கொண்ட மொத்த செலவு 386,000 மதிப்புள்ள விமான டிக்கெட்டுகள் உட்பட்ட 1,222,000 ரூபாய்கள் என்று அமைச்சர் கூறினார்.

சீனப் பயணத்திற்காக ஜனாதிபதிக்கு தினசரி 2,055 அமெரிக்க டொலர்களும், துபாய் பயணத்திற்காக 960 அமெரிக்க டொலர்களும் கிடைத்ததன.

எனினும் , அவர் அனைத்துப் பணத்தையும் ஜனாதிபதி செயலகத்திற்குத் திருப்பி அனுப்பியதாகவும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி திசாநாயக்க மூன்று நாடுகளுக்கு 1.8 மில்லியன் செலவில் எவ்வாறு விஜயம் செய்தார் என்பதையும், மஹிந்த ராஜபக்ச தனது வெளிநாட்டுப் பயணங்களுக்காக 3,572 மில்லியன் ரூபாய்களை செலவழித்தார் என்பதையும், நாடாளுமன்ற உறுப்பினர்களால் உணர முடியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று ஜெயதிஸ்ஸ கூறினார்.

ஜனாதிபதி மஹிந்தவின் 3,572 மில்லியன் என்பது ஜனாதிபதி செயலகம் ஏற்றுக்கொண்ட செலவுகள் மட்டுமே என்றும், மேலும் செலவுகள் அந்தந்த அமைச்சகங்களால் ஏற்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், வெளிநாட்டுப் பயணங்களுக்காக அந்தந்த அமைச்சகங்கள் ஏற்றுக்கொண்ட செலவுகளை தாங்கள் வெளிப்படுத்தவுள்ளதாகவும் என்று அவர் கூறினார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி ஆர்ப்பாட்டம்: கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு – தையிட்டி பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட...

25 68123cd9dd1b1
செய்திகள்இலங்கை

எரிபொருள் இருப்பு உறுதி; ஜனவரி விலை திருத்தம் குறித்து இன்னும் முடிவில்லை – கனியவளக் கூட்டுத்தாபனம்!

தேசிய எரிபொருள் தேவையை எவ்விதத் தடையுமின்றி நிறைவு செய்யத் தேவையான போதியளவு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக...

google logo
செய்திகள்உலகம்

ஊழியர்களை சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்குமாறு கூகுள் எச்சரிக்கை!

அமெரிக்க விசா வைத்திருக்கும் தனது ஊழியர்கள் சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என கூகுள் நிறுவனம்...

image 42fd4006b9
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளமைக்க யுனிசெப் ஆதரவு: பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் முக்கிய சந்திப்பு!

அண்மைக்கால அனர்த்தங்களினால் சேதமடைந்த பாடசாலைக் கட்டமைப்புகளைச் சீரமைப்பது மற்றும் மாணவர்களின் கல்வியைத் தொடர்வது குறித்து பிரதமர்...