இலங்கைசெய்திகள்

திசைகாட்டி அரசாங்கம் மீதான பொதுமக்களின் எதிர்பார்ப்பு: அதிர்ச்சியளித்த ஆய்வின் முடிவு

Share
2 50
Share

திசைகாட்டி அரசாங்கம் மீதான பொதுமக்களின் எதிர்பார்ப்பு: அதிர்ச்சியளித்த ஆய்வின் முடிவு

அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு தேர்தலுக்கு பின்னர் வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 24 வீதமாக காணப்பட்ட அரசாங்கத்திற்கான பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு தற்போது 62 வீதமாக அதிகரித்துள்ளது.

“நாடு எண்ணும் விதம்” என்ற தொனிப்பொருளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் புதிய பெறுபேறுகளின் அடிப்படையில் இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு(2024) பெப்ரவரி மாதத்தில் 7 வீதமாக காணப்பட்டதாகவும் இவ்வாண்டின்(2025) அது 62 வீமதாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க அதிகரிப்பாக எடுத்துக்கொள்ள முடியும் எனவும் வெரிட்டே ரிசர்ச் சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு முதல் முறையாக, பெரும்பான்மையான மக்கள், அதாவது 55 வீதமானோர் , இலங்கையின் பொருளாதார நிலைமை மேம்பட்டு வருவதாக நம்புவதாக வெரிட் ரிசர்ச் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனினும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் இன்னும் பலவீனமான நிலையில் இருப்பதாக 47 வீத மக்கள் நம்புவதாக வெரிட் ரிசர்ச் தெரிவித்துள்ளது.

திசைகாட்டி அரசாங்கம்

திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி என்ற பெண்,தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டு நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயற்சிப்பதாக புலனாய்வு அமைப்புகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்தவர் நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம, ஜெயா மாவத்தையைச் சேர்ந்த 25 வயதான பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து, கணேமுல்ல சஞ்சீவ மீது இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலுக்கு துப்பாக்கியை வழங்கியவர் குறித்த பெண் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை நடந்த நாளில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

எனினும் கொலை நடந்து ஐந்து நாட்கள் கடந்தும், இதுவரை மூளையாக இருந்தவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

எனினும், விசாரணை அதிகாரிகள் அவரைப் பற்றிய பல தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, நேற்று, சிறப்புப் படையினர் சந்தேகத்திற்குரிய பெண் மறைந்திருந்த தெஹிவளையில் உள்ள ஒரு விடுதியை சோதனைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...