22 5
இலங்கைசெய்திகள்

சந்தையில் உச்சத்தை தொட்ட பச்சை மிளகாய் விலை

Share

சந்தையில் உச்சத்தை தொட்ட பச்சை மிளகாய் விலை

சந்தையில் பச்சை மிளகாயின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 1800 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பச்சை மிளகாயின் மொத்த விற்பனை விலை 1,780 ரூபாவாகவும், உள்ளூர் சந்தைகளில் 1,800 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை உணவு வகைகளில் ஒரு முக்கிய மூலப்பொருளான பச்சை மிளகாயை பல குடும்பங்களுக்கு கட்டுப்படியாகாத ஆடம்பர பொருளாக மாறியுள்ளது.

சீரற்ற வானிலை, குறைந்த அறுவடை மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவைகளே விலை அதிகரிப்பு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தேங்காய் மொத்த விற்பனை விலை 130 ரூபாய் முதல் 150 ரூபாயும், உள்ளூர் சந்தையில் 140 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...