11 24
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு : இந்த மாத இறுதியில் வங்கிகளுக்கு வரப்போகும் பணம்

Share

விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு : இந்த மாத இறுதியில் வங்கிகளுக்கு வரப்போகும் பணம்

கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு இந்த மாத இறுதியில் வழங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

பயிர் சேத மதிப்பீடுகளில் சுமார் 95 சதவீதம் தற்போது நிறைவடைந்துள்ளதாக அதன் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம்(jaffna), கிளிநொச்சிkilinochchi), திருகோணமலை (trincomale)மற்றும் மன்னார் (mannar)போன்ற பகுதிகளில் பயிர் சேத மதிப்பீடுகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன.

கமநல சேவை நிலையங்களிலிருந்து இறுதி பரிந்துரைக்கப்பட்ட இழப்பீட்டு ஆவணங்கள் கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று தலைவர் மேலும் தெரிவித்தார்.

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை, விவசாய அபிவிருத்தி திணைக்களம், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய சங்க தலைவர்களின் பங்களிப்புடன் சேத மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பரில் இருந்து தொடர்ச்சியாக பெய்து வரும் மழை அதனாலேற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நாடளாவிய ரீதியில் விவசாயிகளின் நெல் உட்பட பிற தானிய பயிர்ச்யெ்கை அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...