இலங்கைசெய்திகள்

பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஆரம்பம்

Share
24 2
Share

தைப்பொங்கல் பண்டிகைக்காக கொழும்பிலிருந்து ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு போதுமான பேருந்து சேவைகள் இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, தொடருந்து திணைக்களம் 4 விசேட தொடருந்துகளை சேவையில் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 10 ஆம் திகதி முதல் தொடருந்துகள் சேவையில் இயக்கப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் ஏ.டி. ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்புக் கோட்டையிலிருந்து பதுளை நோக்கி இரவு 7.30 மணிக்கு ஒரு தொடருந்து புறப்படும் என்றும் மற்றைய தொடருந்து பதுளையில் இருந்து மாலை 5.40 மணிக்கு கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும் என்றும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...