17 29
இலங்கைசெய்திகள்

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

Share

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

நாட்டின் பல பிரதேசங்களிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் கடந்த வாரத்தை விட மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

இதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (29) ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விற்பனை விலை 350 முதல் 400 ரூபா வரையிலும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 800 முதல் 900 ரூபா வரையிலும் விலை அதிகரித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக கரட், வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட பல வகையான மரக்கறிகளின் விலைகள் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாகவும், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலைகளும் இன்றைய நிலவரப்படி வேகமாக அதிகரித்துள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், 160 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பூசணிக்காய் தற்போது 300 – 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏனைய அனைத்து மரக்கறி வகைகளின் விலைகளும் தற்போது 500 – 800 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.

அத்துடன், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.1400க்கும், கிலோ ரூ.1500க்கும், தக்காளி கிலோ ரூ.600 – 800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், நத்தார் பண்டிகை முடிந்து ஒவ்வொரு ஆண்டும் மரக்கறிகளின் விலை அதிகரிக்கும், ஆனால், அடுத்த ஆண்டு முதல் சில வாரங்களில் தேவைக்கேற்ப மரக்கறிகளின் வரத்து இருக்கும் என்பதால் விலை குறையும் என எதிர்பார்க்கலாம் என்று மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...