13 31
இலங்கைசெய்திகள்

கடந்த கால அரசாங்கத்தின் மின்சார வாகன இறக்குமதி திட்டம் குறித்து வெளியான தகவல்

Share

கடந்த கால அரசாங்கத்தின் மின்சார வாகன இறக்குமதி திட்டம் குறித்து வெளியான தகவல்

கடந்த அரசாங்க நிர்வாகத்தின் சர்ச்சைக்குரிய மின்சார வாகன இறக்குமதி திட்டத்தின்கீழ், இரண்டு நிறுவனங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்த வசதியை வழங்குவதற்காக, 31 நிறுவனங்கள், தம்மை பதிவு செய்திருந்தபோதும், குறித்த இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் கண்டறிந்துள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள், நாட்டுக்கு அனுப்பும் வெளிநாட்டு பணத்தின் அடிப்படையில், அவர்களுக்கு மின்சார வாகன அனுமதிகளை வழங்குவதற்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இந்த திட்டத்தை முன்னெடுத்திருந்தது.

எனினும் இந்த திட்டத்தின்கீழ் ஒட்டோ கேபிடல் இன்வெஸ்ட்மென்ட் (பிரைவேட்) லிமிடெட் 335 அனுமதிகளுக்கும், ஓவர்லேண்ட் ஒட்டோ மொபைல் 305 உரிமதாரர்களுக்கும் வாகனங்களை இறக்குமதி செய்து வழங்கியுள்ளன.

அதன்படி, குறித்த இரண்டு நிறுவனங்களும் மொத்த அனுமதிகளில் 64 சதவீதத்தை வழங்கியுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 375 மின்சார வாகனங்கள் மட்டுமே ஜூலை 9 ஆம் திகதி நிலவரப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் வாகன உரிமதாரர்களால் 84 வாகனங்கள் மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்பட்டன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சக கோப்புத் தகவல்களின்படி, இந்த வசதியைப் பயன்படுத்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 164 பேர கடற்படையினர், 150 முகாமையாளர்கள், மற்றும் 96 இயக்குநர்கள், 78 பொறியாளர்கள், 61 அதிகாரிகள் 24 ஆலோசகர்கள், ஒரு சர்வதேச கிரிக்கெட் நடுவர் மற்றும் மூன்று மருத்துவர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வாகன இறக்குமதிகளின் போது அடிப்படை விதிகள் கூட மீறப்பட்டுள்ளதாக கண்றியப்பட்டுள்ளது.

உதாரணமாக, இந்தத் திட்டத்தைப் பெற விரும்பும் ஒவ்வொரு இலங்கை புலம்பெயர்ந்தவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

எனினும் அனுமதியை கொண்டிருக்கும் 1,000 பேரில் 286 பேர் மட்டுமே தம்மை பதிவு செய்துள்ளனர்.

Share
தொடர்புடையது
vagi 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வார இறுதியில் நுவரெலியா – யாழ்ப்பாண மரக்கறி விலைகள்: போஞ்சி கிலோ ரூ. 800!

வார இறுதி நாளான இன்று பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ள விலைப்பட்டியல்கள் வெளியாகியுள்ளன....

1637156252 Damgates 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கந்தளாய் குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு: வினாடிக்கு 750 கன அடி நீர் வெளியேற்றம்!

கந்தளாய் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, கந்தளாய் குளத்தின் நீர் மட்டம்...

25 688e9a504bdbd
அரசியல்இலங்கைசெய்திகள்

கல்விச் சுமை குறைப்பு, மனநலனுக்கு முன்னுரிமை: நுவரெலியா கல்வி அதிகாரிகளுடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடல்!

பேரிடர் நிலைமைக்குப் பின்னர் நுவரெலியா மாவட்டத்தின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவது மற்றும் பாடசாலைகளை...

1529329179 Colombo Fort 2
இலங்கைசெய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு கட்டுப்பாடு: கடற்படை, கடலோரக் காவல் படையின் துரித நடவடிக்கை!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள எரிபொருள் மிதவையில் இன்று காலை (டிசம்பர் 14) ஏற்பட்ட திடீர்...