4 8
இலங்கைசெய்திகள்

வெங்காய இறக்குமதி : அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Share

வெங்காய இறக்குமதி : அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இந்தியாவிலிருந்து 20,000 மெற்றிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு வெங்காய நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

நாட்டில் வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் , கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மன்னார் (Mannar), ஹம்பாந்தோட்டை (Hambantota) மற்றும் புத்தளம் (Puttalam) ஆகிய பகுதிகளில் பாரியளவு வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிக்கான தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே. சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அரிசி இறக்குமதி விடயத்தில் அசமந்த போக்கில் செயற்பட்டுள்ளது. தற்போது கட்டுப்பாட்டு விலையில் சதொச ஊடாக அரிசி வழங்கப்பட்டாலும், அங்கு வழங்கப்படும் அரிசி தொகை போதுமானதாக இல்லை.

அரிசிக்கான தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியில் அரசாங்கம் விரைவாகச் செயற்பட்டு அரிசியை இறக்குமதி செய்திருக்க வேண்டும்.

அரசாங்கம் ஏதேனும் சில காரணங்களுக்காக அரிசியை இறக்கமதி செய்யவில்லை என்பது புலப்படுவதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே. சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1529329179 Colombo Fort 2
இலங்கைசெய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு கட்டுப்பாடு: கடற்படை, கடலோரக் காவல் படையின் துரித நடவடிக்கை!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள எரிபொருள் மிதவையில் இன்று காலை (டிசம்பர் 14) ஏற்பட்ட திடீர்...

images 23
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மண்சரிவால் தொடருந்து தண்டவாளங்கள் சேதம்: பலன ரயில் மார்க்கத்தை அமைச்சர் பிமல் ரத்நாயக்க பார்வையிட்டார்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இலங்கையின் பல...

Tamil News large 3478126
இலங்கைசெய்திகள்

400 சுற்றுலாப் பயணிகளுடன் ரிட்ஸ்-கார்ல்டன் சொகுசுக் கப்பல் கொழும்பு வருகை – சுற்றுலாத் துறைக்கு ஊக்கம்!

பிரமாண்டமான சொகுசுக் கப்பல் நிறுவனமான ரிட்ஸ்-கார்ல்டன் (The Ritz-Carlton) நிறுவனத்துக்கு உரித்தான சொகுசுக் கப்பல் ஒன்று,...

1238569 chcod
இலங்கைசெய்திகள்

ரஷ்யா தூதரக ஊழியர் மகனின் அடிப்படை உரிமை மனு: பல்கலைக்கழக நுழைவு விவகாரம் ஜன. 12 அன்று விசாரணை!

ரஷ்யாவுக்கான முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரின் மகனின் பல்கலைக்கழக விண்ணப்பத்தை ஏற்க மறுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...