LOADING...

மார்கழி 4, 2024

ரணிலின் பொருளாதார கொள்கையை அநுர அரசு பின்பற்றுகிறதா…! நாமல் கேள்வி

ரணிலின் பொருளாதார கொள்கையை அநுர அரசு பின்பற்றுகிறதா…! நாமல் கேள்வி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கையை, தற்போதைய அரசாங்கம் பின்பற்றுகிறதா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(04.12.2024) அமர்வின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் உரையாற்றியதாவது, “ஜனாதிபதியின் கொள்கை அறிக்கைக்கும் தேர்தலின் போது வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், இந்தக் கொள்கைகள் உண்மையில் கொண்டு வரப்படுமா அல்லது சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்கைகளா என்ற கேள்வி எங்களுக்கு உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டது நீங்கள் தேர்தலின் போது கூறிய கொள்கையல்ல. அடுத்த ஆண்டு நீங்கள் ஐநூறு பில்லியனை கொண்டுவர வேண்டும்.

எவ்வாறு கொண்டு வருவீர்கள்? காலவரையின்றியா வரிகள் மூலமா? ” என அவர் தெரிவித்துள்ளார்.

Prev Post

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் மீது ஊடுருவல்

Next Post

வடக்கு – தெற்கு இடையே இனவாதம் தோற்றுவிப்பதாக குற்றச்சாட்டு: தயாசிறி கடும் கண்டனம்

post-bars