15
இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை : அரச அதிபர் வெளியிட்ட அறிவிப்பு

Share

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை : அரச அதிபர் வெளியிட்ட அறிவிப்பு

திருகோணமலை – வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மாவடிச்சேனை, சேனையூர் பகுதிகளைச் சேர்ந்த 57 குடும்பங்களின் 153 நபர்கள் மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வெள்ளம் குறைவடைந்து வரும் நிலையில் பலர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மாவடிச்சேனை பகுதியிலுள்ள திருகோணமலை – மட்டக்களப்பு வீதியை ஊடறுத்து வெள்ளநீர் பரவிச் செல்வதனால் வாகனங்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணிப்பதையும் காண முடிந்ததாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இன்றையதினம் இவ் வீதியில் ஏற்கனவே இருந்ததைவிட நீர் பிரவாகம் குறைவடைந்துள்ளதுடன் வெருகல் பிரதேச செயலகப் பிரிவின் மாவடிச்சேனை, சேனையூர், வட்டவன், பூநகர் பகுதிகளிலுள்ள வயல் நிலங்கள் பலவவும் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ள அனர்த்தத்தினால் தமது வீடுகள், வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு வருடமும் இந்த நிலைமை ஏற்படுவதாகவும் தமது பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.

இதேவேளை இன்று (01) திருகோணமலை மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி வெருகல் – மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமிற்கு வருகை தந்து நிலமைகளை கேட்டறிந்து கொண்டார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், ”வெள்ள அனர்த்தத்தினால் வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு இடைத்தங்கல் முகாம்கள் இருந்தன. தற்போது வெள்ளம் குறைவடைந்துள்ளது.

இங்கு தற்போது 57 குடும்பங்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு சகல அமைப்புகளும் உதவி செய்கின்றன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோர் அதேபோன்று விவசாயத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் அரசாங்கத்தினால் நஷ்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்“ என தெரிவித்தார்.

திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நேரில் சென்று நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் (Shanmugam Kugathasan) பார்வையிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட கள்ளம்பற்றை திரியாய், குச்சவெளி, பெரியகுளம், பாலம் போட்டாரு, பத்தினி புரம், தம்பலகாமம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கும் தற்காலிக முகாம்களை பார்வையிட்டு அங்கிருக்கும் தேவைகளை கேட்டறிந்து நிவாரணப் பணிகளை அவர் துரிதப்படுத்தினார்.

இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கி வருகின்றனர்.

வெள்ள நீரை வடிந்தோட செய்வதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர (Jayantha Lal Ratnasekera) வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

தற்போதைய அனர்த்த நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல்இ நீரில் மூழ்கியுள்ள இடங்கள், இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வியாழக்கிழமை (28) வரை 3372 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 15000 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்து இருப்பதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி (Chaminda Hettiarachchi) தெரிவித்துள்ளார்.

வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த மாவட்டத்தில் 14 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 254 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...