இலங்கை

மின்சாரம் தாக்கி கணவன் – மனைவி பலி

Published

on

புத்தளத்தில் மின்சாரம் தாக்கியதில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் உயிரிழந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

சம்பவத்தில் 54 வயதான எஸ். ஏ. எஸ். ஸ்டான்லி திலகரத்ன மற்றும் 53 வயதான சந்திரிகா மல்காந்தி என்பவர்களே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த நபர் முந்தலம பகுதியில் கார் கழுவும் நிலையம் ஒன்றை நடத்தி வந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் வீட்டில் தண்ணீர் பாய்ச்சும் மோட்டருக்கான மின்சார இணைப்பில் ஏற்பட்ட பழுதை சீர்செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இதன்போது கணவனை காப்பாற்ற முயற்சித்த மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன் மற்றும் மனைவி அயலவர்களால் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தம்பதியினரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை முந்தல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version