இலங்கைசெய்திகள்

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றும் அநுர அரசு : எச்சரிக்கும் முன்னாள் எம்.பி

Share
10 32
Share

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றும் அநுர அரசு : எச்சரிக்கும் முன்னாள் எம்.பி

வடக்கு மற்றும் கிழக்கில் பிரபல்யமடைவதற்காக அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் (Polonnaruwa) நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஆதரவு வழங்கியுள்ளதை முழுமையாக வரவேற்கிறோம்.

தெற்கு அரசியல் கட்சிக்கு வடக்கு மக்கள் ஆதரவளித்துள்ளமை சிறந்த அரசியல் மாற்றமாகும். தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

அநுரகுமார திசாநாயக்க எளிமையானவர், நாடாளுமன்றத்துக்கு எளிமையான முறையில் வருகை தந்தார் என்று தற்போது ஜனாதிபதியின் புகழ்பாடுகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவும் (Gotabaya Rajapaksa) தனது வீட்டில் இருந்து ஜனாதிபதி செயலகத்துக்கு சென்றார், எளிமையான முறையில் நாடாளுமன்றத்துக்கு சென்றார். இறுதியில் நேர்ந்தது என்னவென்பதை மக்கள் அறிவார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை விடுவிக்கவும், இராணுவ முகாம்களையும், பாதுகாப்பு தடுப்புக்களை அகற்றவும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

உலகில் 38 நாடுகளில் விடுதலைப்புலிகள் மீதான தடை இன்றும் நடைமுறையில் உள்ளது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய அம்சங்களை பலவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பாரிய இழப்புகளுக்கு மத்தியில் தான் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...