இலங்கை
ஜப்பானின் உதவியுடன் மத்திய அதிவேகப்பாதை பணிகள் நிறைவு செய்யப்படும் – ஜனாதிபதி
ஜப்பானின் உதவியுடன் மத்திய அதிவேகப்பாதை பணிகள் நிறைவு செய்யப்படும் – ஜனாதிபதி
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு ஜப்பானின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அதனை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (02.11.2024) தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கண்டியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போது நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குட் செட் பேருந்து நிலையம் போன்ற பெரும்பாலான திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடுகஸ்தோட்டை, பேராதனை, தென்னகும்புர ஆகிய இடங்களிலும் பேருந்து முனையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டபோதும், அவையும் நிறுத்தப்பட்டுள்ளன.
எனினும், விரைவில் இந்த கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.