5 53
இலங்கைசெய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

Share

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண (Uva Province) தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01.11.2024) ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

 

தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (31.10.2024) கொண்டாடப்படவுள்ள நிலையில், தீபாவளி தினத்துக்கு மறுநாள் தமிழ் மாணவர்கள் பாடசாலைக்கு வருவதில் சிரமம் என்பதால் இந்த தீர்மானிம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மேலும், குறித்த நாளுக்கான கல்வி செயற்பாடுகளை எதிர்வரும் நவம்பர் (09.11.2024) ஆம் திகதி முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கல்வி அமைச்சு (Ministry of Education) வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2025ம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
female police constable
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பதுளையில் அதிர்ச்சி: 4.2 கிராம் ஹெரோயினுடன் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!

பதுளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) கடமையாற்றி வந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஹெரோயின்...

5bb31f57 563f 403c 81e7 2b351f640391 16x9 1200x676
செய்திகள்உலகம்

போரின் விளிம்பில் ஈரான்: ரியால் வரலாறு காணாத வீழ்ச்சி – மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் குவிப்பு!

ஈரானின் தேசிய நாணயமான ரியால் (Rial), அமெரிக்க டொலருக்கு நிகராக 1.5 மில்லியன் என்ற அதலபாதாள...

MediaFile 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் சட்டவிரோத மதுபான விற்பனை: பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடம் சிக்கிய சந்தேகநபர்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரைப்...

image 870x 6764441226ca0
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு: 2026-ல் 220 பில்லியன் ரூபாய் மேலதிக செலவு – அமைச்சரவை அறிவிப்பு!

மருத்துவர்கள் உட்பட முழு அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான அடிப்படை வேதன உயர்வை வழங்குவதற்காக...