இலங்கை
தேர்தலுக்குப்பின் காத்திருக்கும் அதிரடி கைதுகள்: எச்சரிக்கும் அநுர தரப்பு
தேர்தலுக்குப்பின் காத்திருக்கும் அதிரடி கைதுகள்: எச்சரிக்கும் அநுர தரப்பு
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி தேர்தலுக்காக இடம்பெற்ற பிரசார மேடைகளில் தேசிய மக்கள் சக்தியானது படுகொலைகள், நீதி விவகாரங்கள், அரச ஊழல் தொடர்பிலான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பகிரங்கப்படுத்தியிருந்தது.
தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் அவ்வாறான தவறுகளுக்கு நீதி நிலைநாட்டப்படும் என தேசிய மக்கள் சக்தியின் மேடைகள் எங்கும் உறுதிமொழிகள் எதிரொலித்தன.
அந்த வகையில், தற்போது ஆட்சிபீடத்தை அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் கைப்பற்றியுள்ள நிலையில், மேடைகளில் முன்வைத்த உறுதிமொழிகளுக்கான நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நகர்வதாக எதிர்க்கட்சி தரப்புக்களால் குற்றம் சுமத்தப்படுகின்றன.
இந்த குற்றச்சாட்டுக்கள் சமூகத்தின் மத்தியிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், இலங்கை அரசியலில் எதிர்கால திட்டமிடல்களை அநுர அரசாங்கம் எவ்வாறு மேற்கொள்ளப்போகின்றது என்பது தொடர்பான சில விளக்கங்களை அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பொது தேர்தல் வேட்பாளர் நாராயணன் பிள்ளை சிவனந்தராஜா வழங்கியுள்ளார்.
தமது அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றி சட்டத்தை ஒரேபாதையில் நகர்த்தும் எனவும், எதிர்பாராத கைதுகளை மேற்கொள்ளும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.