இலங்கை
அநுர அரசில் மீண்டும் விசாரிக்கப்படும் பாரதூரமான கொலைகள் மற்றும் மோசடிகள்
அநுர அரசில் மீண்டும் விசாரிக்கப்படும் பாரதூரமான கொலைகள் மற்றும் மோசடிகள்
கடந்த இரண்டு தசாப்தங்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் நிதிக் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படாமை குறித்த மீண்டும் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான குற்றங்கள் தொடர்பான விசாரணையில் அதிகாரிகள் மேற்கொண்ட முறைகேடுகள் குறித்து ஆராயப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆதாரங்களை மறைத்தல், விசாரணைக் கோப்புகளை முறையற்ற முறையில் தயாரித்தல் போன்றவற்றிலும் முதன்மை கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரும் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த அரசாங்கத்தின் போது மறைக்கப்பட்ட பல இரகசியங்களை அம்பலப்படுத்தும் நோக்கில் பல கோப்புக்களை அநுர அரசாங்கம் மீண்டும் தூசு தட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.