26 12
இலங்கைசெய்திகள்

ரணில் விக்ரமசிங்க குறித்து சாகல ரத்நாயக்க வெளியிட்ட தகவல்

Share

ரணில் விக்ரமசிங்க குறித்து சாகல ரத்நாயக்க வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசிடமிருந்து எதுவும் கோரவில்லை என ரணிலின் முன்னாள் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க அரசிடமிருந்து சமையற்கலை நிபுணர்கள், குடைகள், வாகனங்கள் என பலவற்றை கோரியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு ஊடகவியலாளர்கள் சாகலவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அரசாங்கமொன்றில் ஜனாதிபதியாக, பிரதமராக அல்லது வேறும் உயர் பதவிகளை வகிக்கும் பொழுது அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படும் எனவும், அவர்கள் பதவியிலிருந்து விலகும் அதே நாளில் அவர்களுக்கான அச்சுறுத்தல்களும் நீங்கிடுமா என்பது குறித்து ஆராயப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக இவ்வாறான நிலைமைகளின் போது குறித்த உயர் பதவிகளை வகித்தவர்களுக்கு ஒன்றிரண்டு மாதங்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கி பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு நடைமுறை வித்தியாசமானது எனவும் அரசியல் சாசனத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க நெருக்கடியான நேரத்தில் நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டார் எனவும் அவரது வீடு எரிக்கப்பட்ட நிலையில் அவர் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார் எனவும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வித பாதுகாப்பினையும் கோரவில்லை எனவும் அவரது பாதுகாப்பு பிரிவினர் சில உபகரணங்களை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கு நற்செய்தி: குறைந்தபட்ச ஊதியம் ரூ. 30,000 ஆக உயர்வு!

இலங்கையின் தனியார் துறை ஊழியர்களுக்கான தேசிய குறைந்தபட்ச மாத ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் துறை ஆணையாளர்...

image 9f98662118
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டுநாயக்கவில் ஒரு கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் மீட்பு: மலேசியாவிலிருந்து வந்த வர்த்தகர் கைது!

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுடைய “குஷ்” (Kush) போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்தி வர முயன்ற...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் 1.8 மில்லியன் ஊழியர்களுக்கு AI அச்சுறுத்தல்: கொள்கை ஆய்வுகள் நிறுவனம் (IPS) வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் பணிபுரியும் மக்களில் கணிசமானோர், குறிப்பாக உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் உள்ளவர்கள், செயற்கை நுண்ணறிவின்...

1673514804 Independanr Sri Lanka 6
செய்திகள்அரசியல்இலங்கை

78-வது சுதந்திர தின விழா: கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது!

இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தின விழாவை இம்முறை கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் (Independence Square)...