இலங்கைசெய்திகள்

வீட்டு உரிமையாளரின் அலட்சியம் காரணமாக இளம் பெண்ணிற்கு நேர்ந்த கதி

Share
25 9
Share

வீட்டு உரிமையாளரின் அலட்சியம் காரணமாக இளம் பெண்ணிற்கு நேர்ந்த கதி

பத்தரமுல்ல பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் பாதுகாப்பற்ற பகுதியிலிருந்து தவறி விழுந்து இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டு உரிமையாளரின் அலட்சியம் காரணமாகவே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 11 ஆம் திகதி தவறி விழுந்த யுவதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(14.10.2024) உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த 30 வயதான ஹன்சினி பாக்யா உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இதேவேளை, பத்தரமுல்லை பிரதான வீதி சம்பத் பிளேஸில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் மற்றுமொரு தோழியுடன் அவர் தங்கி இருந்துள்ளார்.

கடமை முடிந்து கடந்த 11ம் திகதி மாலை 6.40 மணியளவில் ஹன்சினி தனது தங்கும் விடுதிக்கு வந்துள்ளார்.

அதன்பின்னர் ஹன்சினி இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்த போது குளியலறையில் இருந்த தோழிக்கு ஏதோ விழும் சத்தத்துடன் அலறல் சத்தம் கேட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

உடனடியாக குளியலறையில் இருந்து வெளியே வந்த தோழி, தங்குமிடத்திற்குப் பின்னால் உள்ள பாதுகாப்பற்ற இடத்தில் இருந்து ஹன்சினி கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேல் தளத்தில் உள்ள குறித்த பாதுகாப்பற்ற இடத்திற்கு எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

பின்னர், ஹன்சனியை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஹன்சினி நேற்று மதியம் அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் பட்டதாரியான ஹன்சினி அவரது குடும்பத்தில் மூன்றாவது மகளாவார்.

அவரது துரதிர்ஷ்டவசமான மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பலரும் விவாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...