30 5
இலங்கைசெய்திகள்

தேர்தல் பரப்புரையை ஆரம்பித்த மன்னாரின் இளம் சட்டத்தரணி

Share

தேர்தல் பரப்புரையை ஆரம்பித்த மன்னாரின் இளம் சட்டத்தரணி

சர்வமத தலைவர்களின் ஆசியுடன் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணியும் சமூக சேவையாளருமான செல்வராஜ் டினேசன் நேற்று (12) தனது தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் இளம் சட்டத்தரணியான செல்வரஜா டினேசன் இம்முறை இடம்பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தில் மன்னாரில் இருந்து போட்டியிடுகின்றார்.

இம்முறை, மாற்றம் ஒன்றையும் இளம் வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என பலரது கோரிக்கைகளுக்கும் அமைவாக சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் இத்தேர்தலில் போட்டியிடுகின்றார்.

இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை உள்ளடங்களாக சர்வமத தலைவர்களின் ஆசியுடன் நேற்றைய தினம் தனது தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளார்.

இவருக்கு மன்னார் மாவட்டத்தில் இளைஞர் குழுக்கள் அமோக ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...