1 scaled
இலங்கைசெய்திகள்

எரிபொருள் தொடர்பில் அநுர எடுத்துள்ள அந்த முடிவு

Share

எரிபொருள் தொடர்பில் அநுர எடுத்துள்ள அந்த முடிவு

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக இல்லாமல் ஜனாதிபதியாகவே எரிபொருள் விலை திருத்தத்தை அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) செய்ததாக இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெட்ரொலியம் மொத்த விற்பனை முனைய நிறுவனத்தின் தவிசாளர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் இன்று (1) பிற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் டி. ஜே. ராஜகருணா அதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, எரிபொருள் விலையை குறைக்கும் தீர்மானம் நாட்டை மையப்படுத்தியே ஜனாதிபதியால் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கைக்கான எரிபொருளை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை முன்பதிவு (oder) செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் விலை குறைக்கப்பட்ட எரிபொருள் கடந்த மாத அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்களை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும் என என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் படி, பெட்ரொலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் தவிசாளர் டி. ஜே. ராஜகருணா வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...