2f 1
இலங்கைசெய்திகள்

திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்..

Share

திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்..

மூதூர் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 58,153 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 12,860 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 8,706 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 4,381 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 119,211 ஆகும்.

1,679 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 86,820 ஆகும்.

மேலும், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 88,499 ஆகும்.

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் சேருவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 26,527வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 22,724 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8,603 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 2,412 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 31,371 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 15,403 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 12,976 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 11,300 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 5480 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4537 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 3630 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 129 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...