4 25
இலங்கைசெய்திகள்

மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி வேட்பாளர்

Share

மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி வேட்பாளர்

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அஸ்வெசும கொடுப்பனவு வேண்டுமென்றால் தனக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பிய சம்பவம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைபடுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவில் பெஃப்ரல் அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.

21ஆம் திகதிக்குப் பின்னர் அஸ்வெசும கொடுப்பனவு பெற வேண்டுமாயின் தமக்கு வாக்களிக்குமாறு அந்தச் செய்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அது வாக்காளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மற்றும் மக்களின் பணத்தில் குறித்த கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும், வேட்பாளர்களின் தனிப்பட்ட பணத்தில் இருந்து வழங்கப்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பல்வேறு விடயங்கள் வழங்கப்படுவதாக கூறி ஒருவர் வாக்குகளை பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...