இலங்கை
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியானோர் தொடர்பில் வெளியான தகவல்
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியானோர் தொடர்பில் வெளியான தகவல்
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு கொழும்பு மாவட்டத்திலிருந்து 1,765,351 பேரும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 1,881,129 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 1,024,244 பேரும், கண்டி மாவட்டத்திலிருந்து 1,191,399 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தில் 429,991 பேரும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 605,292 பேரும், காலி மாவட்டத்திலிருந்து 903,163 பேரும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 686,175 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 520,940 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 593,187 பேரும், வன்னி மாவட்டத்திலிருந்து 306,081 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 449,686 பேரும், திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து 555,432 பேரும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 315,925 பேரும், குருணாகல் மாவட்டத்திலிருந்து 1,417,226 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் புத்தளம் மாவட்டத்திலிருந்து 663,673 பேரும், அநுராதபுரம் மாவட்டத்திலிருந்து 741,862 பேரும், பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 351,302 பேரும், பதுளை மாவட்டத்திலிருந்து 705,772 பேரும், மொனராகலை மாவட்டத்திலிருந்து 399,166 பேரும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 923,736 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 709,622 பேரும் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.