25 9
இலங்கை

சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் !

Share

சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் !

மத்திய சிரியாவின் (Syria) பல பகுதிகளில் இஸ்ரேல் (Israel) வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா (Gaza) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் (Iran) ஆதரவு பெற்ற குழுக்கள் லெபனான் (Lebanon) மற்றும் சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தநிலையில், மத்திய சிரியாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலில் 13 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் (Hamas) அமைப்பின் கூட்டாளியான ஹிஸ்புல்லா (Hezbollah) கடந்த 11 மாதங்களாக இஸ்ரேலியப் படைகளுடன் மோதி வருகிறது.

லெபனான் போராளிக்குழுவான ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்களை அனுப்ப ஈரானுக்கு சிரியா ஒரு முக்கிய வழி என்பதால் சிரியாவில் ஈரானிய ஆதரவு குழுக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...

7003785 rain
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மழை நீடிக்கும்: 5 மாவட்டங்களுக்குப் பலத்த மழை மற்றும் காற்று குறித்த எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்குப் பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடும் என...