இலங்கை
புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ள பெருந்தொகை டொலர்
புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ள பெருந்தொகை டொலர்
2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 ஜூலையில் வெளிநாட்டில் வேலை தேடும் இலங்கையர்களின் எண்ணிக்கை 15% அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் 25,025 தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டில் 28,758 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 2024 ஆகஸ்ட் 13 வரையான 7 மாதங்களில் 187,796 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
இதில் 110,939 சுயதொழில் செய்பவர்கள் மற்றும் 76,857 பேர் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் சென்றவர்கள் என்றும், இவர்களில் அதிகளவிலானோர் குவைட்டில் தொழில் புரிவதாகவும், மேலும் 31,265 பேர் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளனர்.
மேலும், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பணம் 566.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
மேலும் 2024 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3.71 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.