13 3
இலங்கைசெய்திகள்

தேர்தல் கால முறைகேடுகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ள விடயம்

Share

தேர்தல் கால முறைகேடுகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ள விடயம்

ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறும் முறைகேடுகளை கண்காணிக்கவும் அது குறித்த தகவல்களை பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, எந்தவொரு சார்பு அல்லது பாகுபாடும் அற்ற சட்டத்தின் சமமான பாதுகாப்பை, அனைவருக்கும் வழங்குவதற்கு இலங்கை பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தபட்டுள்ளது .
இதன்படி, தேர்தலுக்கு அமைவாக பொலிஸ் மற்றும் ஏனைய அரச அதிகாரிகளால் தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதாக மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்தநிலையில், பொதுமக்கள், தேர்தல் முறைகேடுகள் தொடர்பான தமது முறைப்பாடுகளை 0767914696 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 0112505566 தொலைநகல் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அத்துடன், தமது தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 1 4
செய்திகள்இலங்கை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீதான ஊழல் வழக்கு: கையடக்கத் தொலைபேசி கட்டணம் மோசடி – சாட்சிப் பதிவு நிறைவு, மேலதிக விசாரணை டிசம்பர் 9க்கு ஒத்திவைப்பு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட இரு பிரதிவாதிகளுக்கு...

image 87489e8d1f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை முத்து நகரில் 42 நாட்களான சிசு உயிரிழப்பு: பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைப்பு – காவல்துறையினர் விசாரணை!

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களேயான சிசு ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா காவல்துறையினர்...