24 66ae4501cbf32
இலங்கைசெய்திகள்

நாட்டில் அதிகரித்துள்ள குடும்பத் தகராறுகள்: பொலிஸார் அறிக்கை

Share

நாட்டில் அதிகரித்துள்ள குடும்பத் தகராறுகள்: பொலிஸார் அறிக்கை

தகாத உறவுகள் காரணமாக ஏற்படும் குடும்பத் தகராறுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை பொலிஸ் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் 111,709 குடும்பத் தகராறுகள் பதிவாகியுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டில் 113,188 குடும்பத் தகராறுகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், தகாத உறவுகளினால் ஏற்படும் குடும்பத் தகராறுகள் கடந்த 2022 ஆம் ஆண்டில் 9,636 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 10,408 ஆகவும் அதிகரித்துள்ளன.

கணவர் அல்லது மனைவியினால் ஏற்படும் துன்புறுத்தல்கள், புறக்கணிப்புகள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் கடந்த 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 22,584 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பில் காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியலாளர் ரூமி ரூபன் கருத்து தெரிவிக்கையில், கணவர் மனைவி இருவருக்கும் இடையில் புரிந்துணர்வின்மை, உடலுறவின்மை, அன்பின்மை மற்றும் குடும்பத் தகராறுகள் காரணமாகத் தகாத உறவுகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

25 690304e16a39e
அரசியல்இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: ஆயுதம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், வெளிநாட்டிலிருந்து தற்காப்புக்காக மூன்று ஆபத்தான மிளகு ஸ்ப்ரேக்கள்...

25 690332f7d691e
இலங்கைஉலகம்செய்திகள்

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற இருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

2025 ஒக்டோபர் 27 ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் மாகாண...

25 690349f3051fc
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் கேலிக்கூத்து நடக்கிறது; வயது முதிர்ந்த ரணிலை விடுங்கள் – டயானா கமகே

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் கட்சிக்குள் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு தலைமைப் பதவியை...