இலங்கை
19ம் திருத்தச் சட்டம் குறித்த மனு தாக்கல் ஜனாதிபதி தேர்தலுக்கு இடையூறாகாது: பெபரல் அமைப்பு
19ம் திருத்தச் சட்டம் குறித்த மனு தாக்கல் ஜனாதிபதி தேர்தலுக்கு இடையூறாகாது: பெபரல் அமைப்பு
19ம் திருத்தச் சட்டம் தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு ஜனாதிபதி தேர்தல் நடத்தும் காலத்தில் தாக்கம் செலுத்தாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பெபரல் அமைப்பு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதன் மூலம் அரசியல் அமைப்பு மீறப்படும் என தீர்ப்பளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும் இந்த மனு, ஜனாதிபதி தேர்தல் நடத்துவதனை காலம் தாழ்த்தப்படுவதற்கு ஏதுவாகாது என பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்த மனுவின் ஊடாக 19ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகம் குறித்த மக்களின் நம்பிக்கையை சிதைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயகம் குறித்து மக்கள் மத்தியில் நிச்சயமற்றத்தன்மையை உருவாக்க முயற்சிக்கும் நபர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டுமென ரோஹன ஹெட்டியாரச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.