24 66933d3a9416c
இலங்கைசெய்திகள்

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாதாள உலக தலைவர்களால் மீண்டும் போதைப்பொருள் கடத்தல்

Share

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாதாள உலக தலைவர்களால் மீண்டும் போதைப்பொருள் கடத்தல்

இலங்கையின் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான தலைவர்களாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவ, குடு சலிந்து, வெலே சுதா மற்றும் பொடி லஸ்ஸி ஆகிய குற்றவாளிகள் சிறைச்சாலையில் இருந்து மீண்டும் போதைப்பொருள் கடத்தலை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த பாதாள உலகக் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து ஆறு நவீன கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதன் பின்னர் அவர்களின் பாதாள உலகச் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கனேமுல்ல சஞ்சீவ மற்றும் குடு சாலிந்து ஆகிய இரு பாதாள உலகக் குற்றவாளிகள் சுமார் ஒன்றரை வருடங்களாக தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் பாதாள உலகச் செயற்பாடுகளிலோ போதைப்பொருள் கடத்தல்களிலோ ஈடுபடவில்லை என பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

எனினும் இந்த குற்றவாளிகள் தற்போது தமது கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி பாதாள உலகக் கும்பல் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளை நடத்தி வருவதாக தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பில் இருக்கும் குடு சாலிந்து மற்றும் வெலே சுதா ஆகியோரிடம் 04 ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரும், பூஸ்ஸ சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கணேமுல்ல சஞ்சீவ மற்றும் பொடி லேசி ஆகியோரிடம் மேலும் இரண்டு ஸ்மார்ட் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக தலைவர்களின் கைகளுக்கு இந்த கையடக்கத் தொலைபேசிகள் எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...