24 66910b7955d1b
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ரணில்

Share

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ரணில்

ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வாறான பின்னணியில் நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பவே எதிர்க்கட்சியினர் இச்சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டு வந்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப் போடுவதற்கான எந்த வித தீர்மானத்தையும் அமைச்சரவை மேற்கொள்ளவில்லை.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பின் ஏற்பாடுகளில் காணப்படும் சிக்கலை தீர்ப்பதற்காகவே யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்பாவி மக்களை பணயக் கைதிகளாக வைத்து தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கும் ஜோசப் ஸ்டாலின் மற்றும் தொடருந்து தொழிற்சங்கத் தலைவர்களும் பயங்கரவாதிகளே என்றும் அமைச்சர் கஞ்சன தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...