24 6686b16847ceeddddddddddddddd
இலங்கைசெய்திகள்

ரணில் போன்றோரின் பொய் கதைகளை நம்ப வேண்டாம்: சந்திரசேகரன் சாடல்

Share

ரணில் போன்றோரின் பொய் கதைகளை நம்ப வேண்டாம்: சந்திரசேகரன் சாடல்

அதிபர் தேர்தலை எவரும் பிற்போட முடியாது எனவும் எதிர்வரும் ஒக்டோபர், செப்டம்பர் மாதங்கள் இடையே அதிபர் தேர்தல் நடைபெறும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழில் (Jaffna) இன்று (4.7.2024) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “ரணிலின் நரித்தனம் இனி எடுபடாது. மக்கள் இவ்வாறானவர்களின் பொய் கதையை நம்ப வேண்டாம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலை ஒத்திவைப்பதாக முட்டி போட்டார்.

அது உடனேயே உடைந்துவிட்டது. தற்போது அதிபரின் பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்து ஒரு முட்டி போடப்பட்டுள்ளது. அதுவும் உடைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்கவே (Anura Kumara Dissanayaka) வெற்றி பெறுவார் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...