24 667aa3b8cf1d2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இடம் பெற்ற ஆட்கடத்தல் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட தகவல்

Share

இலங்கையில் இடம் பெற்ற ஆட்கடத்தல் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட தகவல்

கடந்த வருடத்தை விட ஆட்கடத்தலை கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை (Sri Lanka) அரசாங்கம் முன்னேற்றத்தை காண்பித்துள்ளது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆட்கடத்தல் தொடர்பிலான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் 2024ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆள்கடத்தல்களில் ஈடுபடுபவர்களிற்கான தண்டனைகளை அதிகரிப்பது, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களிற்கு சேவைகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் உரிமங்களை இரத்து செய்தது, கடத்தல்களை ஊக்குவிப்பதாக கூறப்படும் தனியார் முகவர் நிலையங்களை தடைசெய்தது என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களிற்கு அதிகாரிகள் உதவிகளை வழங்குகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இது தொடர்பான பல விடயங்களில் அரசாங்கம் ஆகக்குறைந்த தராதரத்தை பூர்த்தி செய்யவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆட்கடத்தல் தொடர்பிலான குறைந்தளவு சம்பவங்கள் குறித்தே அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வழக்கு தாக்கல் செய்துள்ளதோடு கடத்தல்காரர்களுக்கான தண்டனைகள் கடுமையாக காணப்படவில்லை.

இது கடத்தல்காரர்களை பொறுப்பு கூறவைப்பதற்கான முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தலுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் அக்கறையை வெளிப்படுத்தவில்லை, அல்லது பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த முடியாத நிலையில் உள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சிறுவர்களை தவறான நோக்கத்திற்காக கடத்திய சந்தேகநபர்களை கூட பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த விரும்பாத நிலையில் அரசாங்கம் காணப்படுகின்றது.

இந்நிலையில், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் உள்ளபோதிலும் இந்த வழக்குகளில் வெளிநாட்டு சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கவில்லை எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...