20 1
இலங்கைசெய்திகள்

நண்பனுடன் இணைந்து மனைவியைக் கொலை செய்த கணவன் – பொலிஸார் தகவல்

Share

நண்பனுடன் இணைந்து மனைவியைக் கொலை செய்த கணவன் – பொலிஸார் தகவல்

தலங்கம, தலஹேன பகுதியில் அமைந்துள்ள வீட்டில் மனைவியைக் கொன்று 5 நாட்களாக சடலத்தை மறைத்துவைத்த கணவனும், சந்தேகநபரான நண்பரும், நேற்று அதிகாலை தலங்கம பொலிஸில் சரணடைந்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான கணவனும், ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அதிக அடிமையாகியிருந்த அவரது நண்பரும், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் அவரைக் கொன்றதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான தாருகா நதி குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் தலங்கம, தலஹேன பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட மனைவி, கணவர் மற்றும் அவர்களது குழந்தையுடன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சந்தேகநபரின் கணவர் 7-8 வருடங்களாக நண்பர் ஒருவருடன் பழகியுள்ளார், அவர் கலேவெல பிரதேசத்தில் வசிப்பவராகும்.

கடந்த 6 ஆம் திகதி கணவர் தனது நண்பருடன் வீட்டில் ஐஸ் போதை பொருள் பருகிக் கொண்டிருந்த போது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

பின்னர் கணவரின் நண்பர் மனைவியை கத்தியால் தலையில் அடித்து கொன்று உடலை வீட்டில் மறைத்து வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் இருந்தனர்.

நேற்று அதிகாலை இருவரும் தலங்கம பொலிஸில் சரணடைந்ததுடன் பெண்ணை தாங்களே கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...