24 6665ebef8a35a
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதன் முதலாக இந்திய தயாரிப்பில் புதிய பெட்ரோல் வகை

Share

இலங்கையில் முதன் முதலாக இந்திய தயாரிப்பில் புதிய பெட்ரோல் வகை

சிலோன் இந்தியன் எண்ணெய் நிறுவனம் (Lanka IOC)எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இலங்கைக்கு புதிய வகை எரிபொருளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

குறித்த எரிபொருள் வகை எக்ஸ்பி 100 ஆக்டேன் பெட்ரோல் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாரஹேன்பிட்டி மற்றும் தும்முல்லை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து புதிய பெட்ரோலின் அறிமுகத்தை ஆரம்பிக்க நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, XP100 என பெயரிடப்பட்ட இந்த வகை பெட்ரோல் இந்தியாவிலேயே உள்நாட்டிலேயே தாயாரிக்கப்படுகின்றது.

அத்துடன், யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியா நிறுவனம் (United Petroleum Australia) ஜூலை இறுதி அல்லது ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, இந்த அவுஸ்திரேலிய நிறுவனமும் தற்போதுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளடங்கலாக 50 இக்கும் மேற்பட்ட புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....