24 666535e9a7cb1
இலங்கைசெய்திகள்

நாளாந்தம் பதிவாகும் நூற்றுக்கணக்கான டெங்கு நோயாளர்கள்

Share

நாளாந்தம் பதிவாகும் நூற்றுக்கணக்கான டெங்கு நோயாளர்கள்

இலங்கையில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் (NDCU) பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர (Sudath Samaraweera) தெரிவித்துள்ளார்.

தற்போது நாளாந்தம் சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 25,619 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை அவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய மேல் மாகாணத்தில் மாத்திரம் 9,348 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணம் மாத்திரமின்றி வடமேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் டெங்கு நோய் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை கவனத்திற்கொண்டு, டெங்கு பரவும் இடங்களை அழிப்பதற்கு ட்ரோன்கள் மூலம் நுளம்பு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுமென கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பி.கே. புத்திக மகேஷ் (Dr. B.K. Buddhika Mahesh) தெரிவித்துள்ளார்.

மேல்மாகாண டெங்கு கட்டுப்பாட்டுக் குழுவின் ஆலோசனையின் பேரில், விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் இப் பணியை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரியின் 05 பிரிவுகளும் கம்பஹா மாவட்டத்தில் 06 பிரிவுகளும் களுத்துறை மாவட்டத்தில் 08 பிரிவுகளும் வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...