24 666297bb439c2
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான சலுகை

Share

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான சலுகை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ மற்றும் களனிமுல்ல பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாடப் புத்தகங்களை இழந்த பாடசாலை மாணவர்களின் அவல நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதற்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த கல்வி அமைச்சர், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெள்ளத்தினால் பாடசாலை பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு உதவுவதற்கு அமைச்சுடன் இணைந்து வேலைத்திட்டமொன்றை வகுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நான்கு லீற்றர் பெற்றோல் வைத்திருந்தவருக்கு 21 நாட்கள் சிறை: நிக்கவரட்டிய நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோதமான முறையில் நான்கு லீற்றர் பெற்றோலைத் தனது கைவசத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய...

Untitled 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக்...

02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...