24 665cac167d631
இலங்கைசெய்திகள்

யாழில் தொலைபேசி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது

Share

யாழில் தொலைபேசி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்து சென்ற விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் தரித்து நின்ற முச்சக்கரவண்டியில் வைத்து பூட்டப்பட்டிருந்த 190,000 ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை துவிச்சக்கர வண்டியில் வந்த மர்ம நபரொருவர் கொள்ளையடித்து சென்றார்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் கண்காணிப்பு கமராவின் காணொளியை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர் சாவல்கட்டு பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை புலனாய்வு பிரிவினரால்கைது செய்யப்பட்டு யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதன் படி, விசாரணையில் குறித்த சந்தேக நபர் 30,000 ரூபா பணத்திற்கு ஆறுகால் மடத்தைச் சேர்ந்தவருக்கு கையடக்கத் தொலைபேசியை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கையடக்கத் தொலைபேசியை வாங்கியவரும் கைது செய்யப்பட்டு கையடக்கத் தொலைபேசி மீட்கப்பட்டது.

சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், கையடக்கத் தொலைபேசியை திருடியதாக கருதப்படும் சந்தேகநபர் சைக்கிள் திருட்டுகளில் ஆறுமாத காலம் தண்டனை பெற்று விடுதலையாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...