24 665d51103d868
இலங்கைசெய்திகள்

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தின் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்லேவெல மற்றும் கனேகொட தொடருந்து நிலையங்களுக்கும் வெயங்கொட மற்றும் கம்பஹா தொடருந்து நிலையங்களுக்கும் இடையில் இவ்வாறு சமிக்ஞை அமைப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடருந்து திணைக்கள (Sri Lanka Railways) துணைப் பொது முகாமையாளர் ஜெ.என்.இந்திபொலகே (J.N. Inthipolage) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீரற்ற வானிலையுடன் பிரதான மார்க்கம், கரையோர மார்க்கம் மற்றும் புத்தளம் மார்க்கத்திலும் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில தொடருந்து சேவைகள் தாமதமாக வருவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை வாக மற்றும் கொஸ்கம தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் தொடருந்துகள் வாக தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...