24 665be0fd95782
இலங்கைசெய்திகள்

ரஷ்யா போருக்கு சென்ற நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் மாயம்

Share

ரஷ்யா போருக்கு சென்ற நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் மாயம்

ரஷ்ய – உக்ரைன் (Russian – Ukraine) போரில் இணைந்து கொண்ட முன்னாள் படையினரில் 330 பேரை காணவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabri) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவருடன் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ரஷ்ய, உக்ரைன் போரில் பாதுகாப்பு முன்னரங்கில் போரில் ஈடுபட்டு வரும் முன்னாள் படையினரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

போரில் ஈடுபட்டுள்ள முன்னாள் படையினரின் குடும்பங்களிடம் இந்த தகவல்கள் திரட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தங்களை மீளவும் நாட்டுக்கு அழைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் படைவீரர்கள் தங்களது குடும்பத்தாரிடம் கோரியுள்ளதாக கூறியுள்ளார்.

முன்னாள் படையினரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...