24 665947c58735a
இலங்கைசெய்திகள்

பல இடங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை

Share

பல இடங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை

தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று வலுவடைந்து காணப்படுவதனால் நிலவுகின்ற காற்றும் மழையுடனான வானிலையும் மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் (Mohamed Saliheen) தெரிவித்தள்ளார்.

இன்றைய நாளுக்கான வானிலை குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ” மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று வலுவடைந்து காணப்படுவதனால் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் கடற்றொழிலாளர்களும் கடல் சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஏனைய கடல் பிராந்தியங்களுக்கு செலபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் காணப்படும்.

கற்பிட்டி தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 ‐ 3.5 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும்.

ஆகையினால் கற்பிட்டி தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களை அண்மித்த கரையோரத்திற்கு கடல் அலைகள் உட்புகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது” என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...