24 6656ccc7d4977
இலங்கைசெய்திகள்

தொழிலாளர்களுக்கான விசேட நிவாரணம் தொடர்பில் தகவல்

Share

தொழிலாளர்களுக்கான விசேட நிவாரணம் தொடர்பில் தகவல்

பலதரப்பட்ட தொழில் துறைகளிலும் பணியாற்றும் 55 வயது நிறைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakara) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,”கருசரு” வேலைத்திட்டத்திற்கு இணையாக செயற்படுத்தப்படவிருக்கும் இத்திட்டத்துக்கான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மக்களுக்கு பண்டிகைகளைக் கொண்டாட மன நிம்மதி இல்லை என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremsinghe) தலைமையிலான அரசாங்கம் வெசாக், பொசன் பண்டிகைகளை மாத்திரமன்றி நத்தார் பண்டிகையையும் கொண்டாடுவதற்குத் தேவையான சூழலை உருவாக்கியுள்ளது.

இதனால் குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் கடந்த வருடத்துடன் தற்போதைய நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள் என்றே சொல்வேன். மக்கள் இழந்திருந்த மன நிம்மதி மீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை சாடும் எவரிடத்திலும் சரியான பொருளாதாரத் திட்டமொன்று இல்லை. அப்படியொரு வேலைத்திட்டம் இருந்தால் முன்வையுங்கள்.

அஸ்வெசும, உறுமய உள்ளிட்ட திட்டங்கள் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றத்தில் இருந்தாலும் இதற்கு முன்னர் அவர் ஜனாதிபதியாக இருந்ததில்லை. அவர் முதல் முறையாக பதவியேற்றதில் இருந்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.25 வீதமாகக் காணப்பட்ட வங்கி வட்டி இன்று 12 தொடக்கம் 8வீதமாகக் குறைந்துள்ளது.

மேலும், ஊழல் தடுப்புச் சட்டம், தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டம், சொத்துப் பொறுப்புச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலம் மற்றும் பொது அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் என்பன நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பி ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பலதரப்பட்ட தொழில் துறைகளிலும் பணியாற்றும் 55 வயது நிறைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

அரசாங்கம் அறிவிக்கும் சம்பளத்தை வழங்க முடியாதென கூறுவோரின் காணிகள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்படும். பின்னர் அந்த தோட்டங்கள் நீண்ட கால குத்தகை அடிப்படையில் அவற்றை முறையாக நிர்வகிக்கக்கூடிய தரப்பினருக்கு வழங்கப்படும்.

இதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அமைச்சரவை அனுமதியையும் ஜனாதிபதி பெற்றுக்கொண்டுள்ளார்” எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
23858849 newproject 2025 12 28t112541304
செய்திகள்உலகம்

இனி வீட்டு வேலைகளுக்கு ‘ஹுமாயுனோய்டு’ ரோபோக்கள்: சிலிக்கான் வேலியில் தீவிரமடையும் தயாரிப்புப் பணிகள்!

வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்வதற்கான மனித ரொபோக்களை தயாரிக்கும் பணிகள் அமெரிக்காவின் சிலிக்கன் வெலி தொழில்நுட்ப...

24632725 china
செய்திகள்உலகம்

சீனாவில் களைகட்டிய உலக இந்தி தினம்: ஷாங்காய் இந்தியத் தூதரகத்தில் மாணவர்கள் உற்சாகப் பங்கேற்பு!

உலக இந்தி தினத்தை முன்னிட்டு சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விசேட கொண்டாட்டங்கள்...

kalvi L 260112092401000000
செய்திகள்உலகம்

தட்சசீலத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான குஷான கால நாணயங்கள் கண்டெடுப்பு: உலகளாவிய வணிக மையம் என்பது உறுதி!

பாகிஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க தட்சசீலம் (Taxila) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 2,000 ஆண்டுகள் பழமையான குஷானப்...

26 69631f5fb34d5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தீவிரமடையும் வைரஸ் காய்ச்சல்: கொழும்பில் சிக்குன்குனியா; நாடு முழுவதும் டெங்கு அச்சம்!

இலங்கையில் தற்போது பல்வேறு வகையான வைரஸ் நோய்கள் வேகமாகப் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின்...