இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் மிகப்பெரிய மாஸ்டர்செப் விருதை வென்ற இலங்கைத் தமிழர்

Share
24 664e85ea635e5
Share

பிரித்தானியாவில் மிகப்பெரிய மாஸ்டர்செப் விருதை வென்ற இலங்கைத் தமிழர்

பிரித்தானிய இலங்கையரான கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்- பிரின் பிரதாபன்;( Brin Pirathapan)தொலைக்காட்சி ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப்பெரிய சமையல் போட்டியின்; 20வது தொடர் முடிவில் வெற்றிபெற்று, மாஸ்டர்செஃப் செம்பியன் 2024 என்ற மதிப்புமிக்க பட்டத்தை வென்றுள்ளார்.

இந்தநிலையில், பிபிசி வன்னில், நடுவர்களான ஜோன் டோரோட்;( John Torode ) ) மற்றும் கிரெக் வாலஸ்;( Gregg Wallace) ஆகியோரால்; மாஸ்டர்செஃப் கிண்ணம் பிரினுக்கு வழங்கப்பட்டது.

இதன்படி, மாஸ்டர்செஃப் வரலாற்றின் ஒரு அங்கமாகி, 29வயதான பிரின், இரண்டு தசாப்தகால சிறந்த செம்பியன்களான Thomasina Miers, Peter Bayless, James Nathan, Mat Follas, Dhruv Baker, Tim Anderson, Shelina Permalloo, Saliha Mahmood Ahmed, Kenny Tutt, Irini Tzortzoglou, Thomas Frake, Tom Rhodes, Eddie Scott,Chariya Khattiyot ஆகியோருடன் இணைந்துள்ளார்.

எட்டு வாரங்கள் கடினமான சவால்களுக்குப் பிறகு 57 மற்ற சமையல் போட்டியாளர்களை வென்று பிரின் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தனது பெற்றோரே, உணவு மற்றும் சுவையின் மீதான தனது விருப்பத்தை ஊக்குவித்ததற்காக பிரின் குறிப்பிட்டுள்ளார்.

அற்புதமான காரமான சமையல் பின்னணியை தாம், தமது பெற்றோரிடமிருந்து பெற்றதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது சமையல் பகுதிகள் உண்மையிலேயே இலங்கையின் தமிழ் இலங்கை பாரம்பரியம் மற்றும் தமது பிரித்தானிய வளர்ப்பின் கலவையாகும் என்று பிரின் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...