24 66471c0fb5c09
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பரவும் கொடிய நோய்த்தாக்கம்:பொதுமக்களுக்கு கோரிக்கை

Share

இலங்கையில் பரவும் கொடிய நோய்த்தாக்கம்:பொதுமக்களுக்கு கோரிக்கை

நாட்டில் தற்போது மக்கள் மத்தியில் டைபாய்டு பாக்டீரியா ( typhoid Bacteria) பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நோய்த்தாக்கம் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

டைபாய்டு பாக்டீரியாவானது மலக் கழிவுகளால் உருவாகின்ற அதேவேளை பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து மற்றொரு நபருக்கு பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளாதவர்கள் மற்றும் வெளியூர் சென்று வருபவர்களை இது குறித்து அவதானமாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உணவு மற்றும் பானங்களைத் தயாரிக்கும் போது, அது மற்றொரு நபருக்கு பரவும் அபாயமுள்ளது.

எனவே இயன்றவரை வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுமாறு சுகாதாரத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், இதயத்துடிப்பு குறைதல், சோர்வு, இருமல், தலைவலி மற்றும் மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

டைபாய்டு பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைத்து சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகங்களிலிருந்தும் அதற்கான தடுப்பூசிகளை இலவசமாகப் பெறலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...